ஹாலிவுட் நடிகைக்கு டப்பிங் பல்டி அடித்த டாப்ஸி
ஹாலிவுட் நடிகைக்கு டப்பிங் பேச ஒப்புக் கொண்ட டாப்ஸி, சில மணி நேரத்தில் அந்த முடிவை மாற்றிக் கொண்டுவிட்டார். ஹாலிவுட் ஹீரோயின் கேதி சாகப் நடித்திருக்கும் ‘ரிட்டிக்’ என்ற படம் இந்தி, தமிழ், தெலுங்கில் டப்பிங் ஆகிறது. இதில் கேதிக்கு டப்பிங் குரல் கொடுக்க நம்மூர் ஹீரோயினை தேடினர். டாப்ஸியின் குரல் நடிகையின் குரலுக்கு பொருத்தமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை அணுகி டப்பிங் பேச கேட்டனர்.தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை ஒரு மாதம் ஒத்திவைத்துவிட்டு டப்பிங் பேச ஓ.கே. சொன்னார். ஆனால், சில மணி நேரத்துக்கெல்லாம் தனது மனதை மாற்றிக்கொண்ட டாப்ஸி, ஹாலிவுட் படத்துக்கு டப்பிங் பேச நேரமில்லை என்று பல்டி அடித்தார்.
இதுபற்றி பட குழுவினர் தரப்பில் கேட்டபோது, ‘டாப்ஸியிடம் பேசியபோது டப்பிங் பேசுவதற்கு மறுப்பு எதுவும் சொல்லவில்லை. அவருடன் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரை சந்தித்து பேசும்போது டப்பிங் பேசுவது பற்றி இறுதி செய்யப்படும்’ என்கின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment