ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வந்து ஹீரோயினான லட்சுமி மேனன்

No comments
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்க வந்த லட்சுமி மேனனுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன். ‘ரகுவின்டே சொந்தம் ரசியா’ என்ற மலையாள படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக ஒரு காட்சியில் நடிக்க வந்த இவர், மலையாள இயக்குனர் அலி அக்பர் பார்வையில் விழுந்தார்.


 உடனே தனது படத்தில் ஹீரோயினாக்க முடிவு செய்த அலி அக்பர், அவரை அழைத்து ஸ்கிரின் டெஸ்ட் எடுத்தார். பின்னர் ‘ஐடியல் கப்பிள்’ என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தந்தார். இந்த படத்துக்கு பிறகு லட்சுமி மேனனுக்கு சுக்கிர திசை அடித்தது. ‘கும்கி’, ‘சுந்தர பாண்டியன்’ படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

 தற்போது ‘மஞ்சப்பை’, ‘சிப்பாய்’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். லட்சுமி மேனனை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய அலி அக்பர் கூறும்போது, ‘‘சில பெண்கள் நேரில் பார்ப்பதற்கு சுமாராக இருப்பார்கள்.

ஆனால் போட்டோவில் பார்த்தால் எடுப்பாக இருப்பார்கள். அப்படியொரு முக லட்சணம் கொண்டவர்தான் லட்சுமி மேனன். அவரை நான் அறிமுகப்படுத்தி இருந்தாலும் இன்றைக்கு பெரிய ஹீரோயினாக இருக்கிறார். நான் சிறு பட்ஜெட் படம்தான் எடுக்கிறேன். அவர் இப்போது வாங்கும் அளவுக்கு சம்பளம் கொடுத்து என்னால் அவரை ஒப்பந்தம் செய்ய முடியாது’’ என்றார்.

No comments :

Post a Comment