”இசைக்காக வாழ்கிறேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்!

No comments
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மரியான் திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றுவிட்டன.மரியானைத் தொடர்ந்து கோச்சடையான், ஐ, ஹைவே(இந்தி), காவியத்தலைவன் ஆகிய திரைப்படங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கின்றன.

 மிகப்பெரிய புராஜக்டுகளை கையில் வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ரிலாக்ஸாக உட்கார கூட நேரமில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறாராம். இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “ எனக்கு ஓய்வெடுக்க கூட் நேரமில்லை. இசைப்பள்ளி, பட வேலைகள் என்னை பிஸியாகவெ வைத்திருக்கின்றன.

இவையெல்லாம், கடவுள் என்னை ‘நீ போய்க்கொண்டெ இரு’ என்று சொல்வது மாதிரி இருக்கிறது. நான் இசையமைக்கத்தான் இருக்கிறேன்.
 இனியும் செய்துகொண்டே இருப்பேன். இசைக்காகவே வாழ்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

No comments :

Post a Comment