எனக்கு பிடித்த இயக்குனர் தங்கர் பச்சான்

No comments
தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம், ‘களவாடிய பொழுதுகள்’. பரத்வாஜ் இசை. வைரமுத்து பாடல்கள். ஐங்கரன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகும் இந்தப்படம் பற்றி நிருபர்களிடம் பிரபுதேவா கூறியதாவது: இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு, என்னை இயக்கியவர்களில் என் மனதுக்கு பிடித்த இயக்குனராகி விட்டார் தங்கர் பச்சான்.

 படம் தயாராகி நீண்ட நாட்களாகி விட்டது. தாமதமானது பற்றி தங்கர்பச்சான் வருத்தப்பட்டார். இந்தப்படம் உருவாக அவர் சந்திக்காத சிரமங்கள் இல்லை. இதில் நான் நடிக்கவே இல்லை.

இயக்குனர் என்னைப் பார்த்து, ‘வாங்க. உட்காருங்க. எழுந்து நடந்து போங்க. ஏதாவது பேசுங்க’ என்று சொன்னார். அதைதான் செய்தேன். டப்பிங் பேசும்போது படத்தைப் பார்த்து கண்கலங்கி விட்டேன்.

 இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தால், அது தங்கர்பச்சானை சேரும். இவ்வாறு அவர் சொன்னார். தங்கர்பச்சான், வைரமுத்து உடனிருந்தார்


No comments :

Post a Comment