தலைவா அரசியல் படமல்ல விஜய் பரபரப்பு அறிக்கை

No comments
விஜய், சத்யராஜ், அமலா பால் நடித்துள்ள படம், ‘தலைவா’. விஜய் இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையில் இது அரசியல் படம் என்றும், அரசியல் தலைவர்களைத் தாக்கி எடுக்கப்பட்ட படம் என்றும் செய்தி வெளியானது.

இதை மறுத்து நடிகர் விஜய், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தலைவா’ குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான படம். இதில் காமெடி, ஆக்ஷன், காதல் என அனைத்தும் உண்டு. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் அப்படி வதந்தி பரப்பி வருகிறார்கள். இது அரசியல் கலக்காத சமூக படம். அதனால் அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

 முன்னதாக, தயாரிப்பாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின், நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷனில் இருந்து தயாராகியுள்ள படம், ‘தலைவா’. படம் வெளியாவதையொட்டி இன்றும் நாளையும் சென்னையில் உள்ள அனாதை மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க இருக்கிறோம். கோமடத்தில் உள்ள ஆயிரம் பசுக்களுக்கும் உணவளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments :

Post a Comment