மகன் தேஜ்ராஜை அறிமுகப்படுத்துகிறார் சரண்ராஜ்

No comments
 ‘நீதிக்கு தண்டனை’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சரண்ராஜ். ஹீரோ, வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சரண்ராஜ் தற்போது தன் மகன் தேஜ்ராஜை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் 400 படங்களுக்கு மேல் நடித்துவிட்டாலும் எனது வாரிசுகள் சினிமாவுக்கு வருவார்கள் என்று நினைக்கவில்லை. ஒரு மகன் பைலட்டாக வேண்டும் என்று விரும்பி அதற்கான பயிற்சி எடுத்து வருகிறான்.

இன்னொரு மகன் தேஜ். ஆரம்பத்தில் இயக்குனராகவோ, ஒளிப்பதிவாளராகவோ வர விரும்பினான். திடீரென்று நடிக்க விரும்பினான். அதற்காக சண்டை பயிற்சி, நடன பயிற்சி பெற்றான். பாலு மகேந்திராவின் நடிப்பு பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றான்.

நடிகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதிகளை வளர்த்துக் கொண்டதால் நடிகனாக அறிமுகப்படுத்துகிறேன். மூன்று படங்களில் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். இப்போது ஹீரோக்களுக்காக படம் ஓடுவதில்லை. கதைக்காகத்தான் ஓடுகிறது. ஆகவே நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பான். இவ்வாறு சரண் ராஜ் கூறினார்.





No comments :

Post a Comment