ஜேம்ஸ் வசந்தனின் கைது: மலையாளிகளின் சதி - விழித்திடு தமிழா
ஜேம்ஸ் வசந்தன் கைது… கமிஷனர் ஜார்ஜ்ஜின் மலையாளப் பாசம்:சுப்ரமணியபுரம், பசங்க போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்றிலிருந்து தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிரிவுகளின் கீழ் சென்னைபோலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்களாம். பாலியல் தொல்லைக்குள்ளான அந்த பெண்ணிற்கு 65 வயதாம்.
கேட்கவே விநோதமாக இருக்கும் இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடிந்தகரையை அறிந்தவர்கள் கமிஷனர் ஜார்ஜை அறிந்திருப்பார்கள். இடிந்தகரை அடக்குமுறை என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய அளவிற்கு கமிஷனர் ஜார்ஜ் அறியப்பட்டவர்.
ஜேம்ஸ் வசந்தன் தமிழில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்பட்ட போதிலும் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை இல்லை. ஜேம்ஸ் வசந்தன் அவருடைய தோற்றம் போலவே மிகவும் மென்மையானவர், அப்படிப்பட்டவர் அல்ல என்று அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதிர்ச்சிகரமாகவும் சந்தேகமாகவும் இருந்ததால் விசாரித்த பத்திரிக்கை நண்பர்கள், தெரிந்த கொண்ட உண்மைகள் அதை விட அதிர்ச்சியாக இருந்ததாக சொல்கிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு வாங்குகிறார். பக்கத்தில் ஏற்கனவே வீடு வாங்கி குடியிருக்கும் ராதா வேணு பிசாத் என்ற 65 வயதுக்கும் மேற்பட்ட மலையாளப் பெண் ஒருவர் குடியிருக்கிறார். அவர் ஜேம்ஸ் வசந்தன் வாங்கிய வீட்டை குறிவைத்து இந்த வீட்டை என் மகனுக்காக வாங்க நினைக்கிறேன். நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். ஜேம்ஸ் வசந்தன் நான் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்க ‘’இந்த ஏரியாவில் என்னை மீறி நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்த்து விடுகிறேன் என்று மிரட்டுகிறார் ராதா வேணு பிரசாத்.
ராதா வேணு பிரசாத்தின் மகன் லண்டன் ஹை கமிஷனில் உயரதிகாரியாம், மேலும் இந்த முதிர்ந்த பெண்மணியின் உறவினர் கேரளாவில் ஐஏஸ் அதிகாரியாக உள்ளார். இவருக்கும் சென்னை கமிஷனர் ஜார்ஜ்ஜுக்கும் நட்பும் இருந்திருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. ஆனால் மலையாளிகள் எளிதில் காரியம் சாதித்து விட முடியும். காரணம் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஒரு மலையாளி.
லண்டன் ஹை கமிஷனின் இருக்கும் ராதாவின் மகன் ஜார்ஜ்டம் தொலைபேசி ஜேம்ஸ் வசந்தனை கைது செய்யுமாறு கேட்கிறார்கள். அதன் பேரில் ஜிப்பை கழட்டிக் காட்டியதாக நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்கிறார் ஜார்ஜ். சுமார் 60 காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று தீவிரவாதி போல சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
இந்நேரம் இது போன்ற நிகழ்வு கேரளாவிலோ, கர்நாடகத்திலோ, நடந்திருந்தால் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் அலறியிருக்கும், நாம் இருப்பது ‘தமிழ்நாட்டில்’ அல்லவா, அதிகபட்சம் போனால் நம் தொலைக்காட்சிகள் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருந்தது ‘ஜீன்ஸ் பேண்டா’, ‘காட்டன் பேண்டா’ என்று ஆய்வுகள் நடக்கலாம். ஜார்ஜ் போன்ற அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், மலையாளிகள், தங்கள் இனத்தவர்களுக்காக தமிழர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செயல்படலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment