காவ்யாவின் 2வது திருமணம் பற்றி வதந்தி பரவியதால் பரபரப்பு
நடிகை காவ்யா மாதவன் 2வது திருமணம் செய்வதற்காக கோயிலில் சிறப்பு பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. காசி, என் மன வானில், சாது மிரண்டால் ஆகிய தமிழ் படங்களில் நடித்திருப்பவர் காவ்யா மாதவன். ஏராளமான மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு தொழில் அதிபர் நிஷ்ச்சல் சந்திரா என்பவரை மணந்துகொண்டு குவைத்துக்கு சென்று செட்டிலானார்.
பிறகு கணவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
சமீபத்தில் காவ்யா, குடும்பத்தினருடன் குருவாயூர் கோயிலுக்கு சென்றார். அங்கு காவ்யாவுக்கு 2வது திருமணம் செய்வதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாகவும், இதையடுத்து குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக காவ்யா மாதவனை தொடர்பு கொண்ட பலர் மறுமணம் எப்போது என்று கேட்க தொடங்கினர். இதுகுறித்து அவரது தாயார் ஷியாமளா கூறும்போது, குருவாயூர் கோயிலுக்கு குடும்பத்தினர் சென்று பூஜை நடத்தியது உண்மைதான். ஆனால் இந்த பூஜை காவ்யாவின் சகோதரர் மிதுனுக்கு நடக்க இருக்கும் திருமணத்துக்காக செய்யப்பட்டது.
இதை தவறாக புரிந்துகொண்டு பலர், காவ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கோயிலுக்கு சென்றதை தவறாக புரிந்துகொண்டதால் இந்த வதந்தி பரவி இருக்கிறது. தற்போது மிதுன் திருமணத்தில் நாங்கள் பிஸியாக இருக்கிறோம். ஒன்றிரண்டு மாதத்தில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment