சாமி ஆட பயிற்சி பெற்ற புது ஹீரோயின்

No comments
கோயில் முன்பு சாமி ஆட கிராமத்து பெண்களிடம் பயிற்சி பெற்றார் புது ஹீரோயின். புதுமுகங்கள் சாரதி, அன்சிபா நடிக்கும் படம் பரஞ்சோதி. இப்படத்தை கோபு பாலாஜி இயக்குகிறார். அவர் கூறியதாவது: இப்படத்தின் ஷூட்டிங் கிராம பகுதிகளில் நடந்து வருகிறது. 

ஒரு கிராமத்தில் அம்மன் கோயில் முன்பு ஹீரோயின் அன்சிபா அருள் வந்து சாமி ஆடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டது. ஆனால் அவரால் வேப்பிலையை கையில் வைத்துக்கொண்டு சாமி ஆடுவதற்கு தெரியவில்லை. பின்னர் அங்கிருந்த பெண்கள் சிலர் அன்சிபாவுக்கு ஆக்ரோஷத்துடன் எப்படி சாமி ஆட வேண்டும் என்று செய்து காட்டினார்கள். 

அதை உற்று கவனித்த அவர் நடிக்க தயார் ஆனார். ஆனால் பலமுறை ரீடேக் வாங்கினார். கடைசியாக பயிற்சி எடுத்து சாமி ஆடினார். இதில் தாய்மாமன் வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். சபேஷ் முரளி இசை அமைக்கின்றனர். எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார். என்.லட்சுமணன் தயாரிக்கிறார்.

No comments :

Post a Comment