சீமா விருதுகள் : சிறந்த நடிகை ஹன்சிகா

No comments
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது வழங்கும் விழா (சைமா) ஐக்கிய அரபு எமிரேட் துபாயில் கடந்த 12, 13ம் தேதிகளில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி சினிமாவில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தென்னிந்திய சர்வதேச சினிமா விருது (சைமா) வழங்கப்பட்டு வருகிறது.

 ஒவ்வொரு மொழியிலும் 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகைக்கான விருது போட்டியில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக நடிகை ஹன்சிகா, நீதானே என் பொன்வசந்தம் படத்திற்காக நடிகை சமந்தா, '3' படத்திற்காக நடிகை ஸ்ருதி ஹாசன், காதலில் சொதப்புவது எப்படி படத்திற்காக நடிகை அமலா பால், துப்பாக்கி படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

 இதில் நடிகை ஹன்சிகா 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்காக சிறந்த நடிக்கான விருதினை பெற்றார்.

No comments :

Post a Comment