சினிமா, எப்போதுமே ஆணாதிக்கம் நிறைந்த உலகம்: டாப்ஸியின் கோபம்!
‘ஆடுகளம்’ படத்தில், ‘வெள்ளாவி’ தேவதையாக அறிமுகமானவர் டாப்சி. தற்போது, ‘ஆரம்பம், கங்கா’ ஆகிய படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, சில படத் தயாரிப்பாளர்கள், டாப்சியை தொடர்பு கொண்டபோது, கதையில் தன் கதாபாத்திரத்துக்கு, முக்கியத்துவம்இல்லை என, தவிர்த்து விட்டார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,‘சினிமா, எப்போதுமே ஆணாதிக்கம்நிறைந்த உலகமாகவே உள்ளது. என்ன தான் நடிகைகள் அழகாக,திறமையாக இருந்தாலும், டூயட் பாட மட்டுமே பயன்படுத்துகின்றனர்.அதுமட்டுமின்றி, ஆண்கள், வழுக்கை விழுந்து, நரை விழுந்தாலும், ஹீரோவாகவே
நடிக்கின்றனர்.
நடிகைகளுக்கு திருமணமாகி விட்டாலே, அண்ணி, அம்மா வேடங்களுக்கேஅழைக்கின்றனர்’ என்று தன் வேதனையை வெளிப்படுத்தும்
டாப்சி, சினிமாவில் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment