மீண்டும் பாலிவுட்டில் ’நிழல்கள்’ ரவி

No comments
பிரகாஷ்ராஜ், சத்யராஜ் வரிசையில் பாலிவுட்டில் தற்போது நுழைந்திருக்கும் இன்னொரு கோலிவுட் பிரபலம் ‘நிழல்கள்’ ரவி. இவர் ஏற்கெனவே ‘ஆத்மி’ என்ற ஒரு ஹிந்திப் படத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் நுழைந்து நடித்து வரும் படம் ’கௌரி தேரே பியார் மெய்ன்’. இந்தப் படத்தை ‘தர்மா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பாக கரண் ஜோஹர் தயாரிக்கிறார்.

 இம்ரான் கான் ஹீரோவாக நடிக்கிறார். அவரது தந்தையாக ‘நிழல்கள்’ ரவி நடிக்கிறார். இம்ரான் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். புனித் மல்ஹோத்ரா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

 தென்னிந்தியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘மெட்ராஸ் கஃபே’ படங்களை போன்று இப்படத்திலும் நிறைய தென்னிந்தியாவை சார்ந்து இருக்கிறதாம். படம் நவம்பரில் ரிலீசாகவிருக்கிறது.


No comments :

Post a Comment