10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடிக்கும் திரிஷாவுக்கு 'சீமா' விருது

No comments
'எனக்கு 20 உனக்கு 18' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. அதன்பின் அவர் நடித்த கில்லி, சாமி படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படமும் வெற்றி பெற்றது.

 தெலுங்கிலும் பல வெற்றிப் படங்கள் கொடுத்தார். சினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடிக்கும் திரிஷாவுக்கு தென்னிந்திய சர்வதேச சினிமா விருது (சீமா) வழங்கப்படுகிறது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி துபாயில் வருகிற செப்.12 மற்றும் 13-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த விருது குறித்து திரிஷா தனது டுவிட்டர் செய்தியில், ''என்மீது மரியாதை வைத்து இந்த விருதை வழங்குவதற்காக 'சீமா'விற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என எழுதியுள்ளார்.

No comments :

Post a Comment