தமிழுக்கு வரும் கன்னட ஹீரோயின்
திருட்டு கிராமம் பற்றிய ‘கன்னக் கோல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் கன்னட நடிகை காருண்யா. இதுபற்றி இயக்குனர் வி.எ.குமரேசன் கூறியதாவது: திருச்சி பகுதியில் ஒரு கிராமமே திருட்டு தொழிலில் ஈடுபடுவதாக கூறுவார்கள். பணத்தை செலவழிப்பது எளிது, அதை சம்பாதிப்பது கடினம். இதுதான் இப்போதைய நடைமுறையாக உள்ளது. இதை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.இதில் பரணி ஹீரோ. இவர் நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்திருக்கிறார். கன்னட நடிகை காருண்யா ஹீரோயின். இவர் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் தவிர மயில்சாமி, கஞ்சா கருப்பு, ‘தீப்பெட்டி’ கணேசன் நடிக்கின்றனர்.
வி.ராமதாஸ் தயாரிக்கிறார். எஸ்.அகோர மூர்த்தி இணை தயாரிப்பு செய்கிறார். செல்வா ஆர்.பி. ஒளிப்பதிவு செய்கிறார். பாபி இசை அமைக்கிறார். திருச்சியில் நடக்கும் கதையாக இருந்தாலும் புதுக்கோட்டை பகுதியில் காட்சிகள் படமாக்கப்பட்டது. 1990-களில் நடப்பது போன்று கதை சித்தரிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment