மீடியாவை பார்த்து மிரண்ட மம்முட்டி
மீடியாவை பார்த்து ரொம்பவே மிரண்டு போயுள்ளாராம் மலையாள மெகாஸ்டார் மம்முட்டி.
பரபரப்புக்காக சின்ன விடயத்தை கூட ஊதி பெரிதாக்கிவிடும் மீடியாக்களால் நடிகர், நடிகைகள் அடைகிற துன்பம் சொல்லி மாளாது.
பத்திரிக்கை சுதந்திரத்திற்கு வேண்டுமானால் பிரேக் போட்டுவிடலாம். அதுவும் சில சமயங்களில் மட்டும்.
ஆனால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களை என்ன செய்ய முடியும்? பல வதந்திகள் அதில்தான் கிளப்பப்படுகிறதாம் இப்போது.
அண்மையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டாராம்.
இவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக ஏதோ ஒரு பத்திரிகை கிசுகிசுக்க, அதை ஊதி பெரிதாக்கிவிட்டதாம் சமூக வலைதளங்கள்.
பதறிப்போன மம்முட்டி ஐயோ, இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி, அப்படியெல்லாம் ஐடியாவே இல்ல என்று கூறியிருக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment