அங்குசம் என்ன கதை?

No comments
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையப்படுத்தி அங்குசம் படத்தை எடுத்துள்ளேன் என்று அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான மனுகண்ணன் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: ‘பெருமான்’ என்ற படத்தை தயாரித்தேன். இந்தப் படத்தை நானே இயக்கி உள்ளேன்.


 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனது ஊரில் ஆக்ரமிப்பால் காணாமல் போன காவிரி ஆற்றின் ஒரு பகுதியை மீட்டெடுத்தவரும் அதே சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்வாதிகளுக்கு கிடுக்கிப் பிடி போடும் திருச்சி சீனிவாசன் என்பவர்தான் இந்தப் படம் உருவாக இன்ஸ்பிரேஷன். 

 காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என்று கமர்சியல் படத்துக்கு என்ன தேவையோ அதோடு படத்தை உருவாக்கி உள்ளோம். ஹீரோவாக ஸ்கந்தா, ஹீரோயினாக ஜெயதி குஹா நடித்துள்ளார். ஊழல் புகாரில் மாட்டிக் கொள்ளும் கலெக்டராக நான் நடித்துள்ளேன். 

படம் வெளியான பின்பு நிறைய சீனிவாசன்கள் தோன்றினால் வெற்றியாக கருதுவோம். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. அக்டோபரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

No comments :

Post a Comment