சர்வதேச பட விழாவில் தங்க மீன்கள்

No comments
சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிட தங்கமீன்கள் படம் தேர்வாகி உள்ளது. 18 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20ம் தேதிமுதல் 30ம் தேதி வரை கோவாவில் நடக்கிறது.

 இதில் இந்தி, மலையாளம், கன்னட படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழில் உருவான ‘தங்க மீன்கள்‘ படம் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

தேர்வான 25 படங்களில் தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படம் இதுதான். இப்படத்தை இயக்கி நடித்திருப்பவர் ராம். குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் இது திரையிடப்படுகிறது. இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்

No comments :

Post a Comment