உலகளவில் முதன் முறையாக சூர்யா படத்தில் ரெட் டிராகன் கமெரா
உலகளவில் முதல் முறையாக சூர்யாவின் படத்திற்கு ரெட்-டிராகன் டிஜிட்டல் கமெரா பயன்படுத்துகின்றனர்.
சிங்கம் 2 வின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் டெஸ்ட் சூட் இன்று நடந்தது. இதில் இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட்-டிராகன் எனும் டிஜிட்டல் கமெராவை பயன்படுத்தினர்.
தமிழில் ரெட் ஒன் வகை கேமராக்கள் சில வருடங்களாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது நவீன தொழில்நுட்பத்தோடு வெளிவந்துள்ள இந்த ரெட்-டிராகன் டிஜிட்டல் கமெராவை இப்படத்தில் பயன்படுத்தவுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்.
ஏற்கெனவே துப்பாக்கி படத்திற்காக, ஆரி அலெக்ஷா எனும் கேமராவை இந்திய சினிமாவில் முதல் முறையாக பயன்படுத்தியவர் சந்தோஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15ம் திகதி தொடங்கவிருக்கிறது. இப்படத்தை லிங்குசாமியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா மூலம் தயாரிக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment