புனேவில் இருந்து சென்னைக்கு 19 மணி நேரத்தில் ரேஸ் பைக்கில் வந்த அஜீத்
புனேவிலிருந்து சென்னைக்கு ரேஸ் பைக்கில் வந்தார் அஜீத். ரேஸ் பிரியரான அஜீத் சொந்தமாக ரேஸ் பைக், கார் வாங்கி வைத்திருக்கிறார். கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையிலிருந்து பெங்களூருக்கு பைக்கில் சென்று வந்த அஜீத் இம்முறை புனேவிலிருந்து சென்னைக்கு பைக்கில் வந்தார்.
இதுபற்றி அவரது தரப்பில் கூறியதாவது:
‘ஆரம்பம்’ படத்தின் பேட்ச் ஒர்க் முடிந்தவுடன் மும்பையிலிருந்து புனேவுக்கு ரேஸ் பைக்கில் வந்து ‘வீரம்’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். 20 நாட்கள் ஷூட்டிங் முடித்தவர் புனேவிலிருந்து சென்னைக்கு பைக்கில் வர முடிவு செய்தார்.
இதற்காக ரோடு மேப் தயாரித்து எடுத்துக்கொண்டவர் 19 மணி நேரத்தில் 1300 கி.மீட்டர் பைக்கில் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களையும் அவரே செய்துகொண்டார். சாலை பயண பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பயணத்தை அஜீத் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின்போது ஹைவே சாலைகளில் உள்ள உணவகங்களில் நிறுத்தி உள்ளூர் உணவை ருசி பார்த்தார். இதுபற்றி அஜீத் கூறும்போது, ‘சாலை பயணம் தியானம் போன்றது. எதிர்கால திட்டங்கள் வகுக்கவும் இந்த பயணம் உதவியது‘ என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment