உலா படத்தில் ஆடுகிறார் கிரிக்கெட் வீரர் பிராவோ
‘சித்திரம் பேசுதடி’ ஸ்ரீகாந்த் தயாரிக்கும் படம் ‘உலா’. ராஜன் மாதவ் இயக்குகிறார். விதார்த், அஜ்மல், அசோக், ராதிகா ஆப்தே, காயத்ரி நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு பத்மேஷ் மார்த்தாண்டன், இசை, சாஜன் மாதவ். இதில் இடம்பெறும் ஒரு பாடலில் மேற்கிந்திய தீவின் கிரிக்கெட் வீரர் பிராவோ ஆடுகிறார். இதுபற்றி சென்னையில் நிருபர்களை சந்தித்த பிராவோ கூறியதாவது:
கிரிக்கெட்டை தவிர சினிமாவில் பாட வேண்டும், ஆட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
இந்தப் படத்துக்காக கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டேன். நான் இந்தப் படத்தில் நடனமாடுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஸ்வின், முரளி விஜய், என் மானேஜர் ரஸ்சல் ஆகியோருக்கு மட்டும்தான் தெரியும். சொந்த ஊர் டிரினிடாட்டில் இசையும் நடனமும் பிரபலம். அதனால்தான் கிரிக்கெட்டைத் தொடர்ந்து இசையிலும் நடனத்திலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
நான் இதுவரை தமிழ்ப்படம் பார்த்ததில்லை. முதல் முறையாக தமிழ்ப்படத்தில் ஆடுவது சந்தோஷம். தொடர்ந்து வாய்ப்பு வந்தால் நடிப்பேன். நான் ஷாரூக்கானின் தீவிர ரசிகன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ராஜன் மாதவ், விதார்த், அசோக் நந்தன், ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் மற்றும் பட க்குழுவினர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment