இனியாவின் சூப்பர் ஆசை

No comments
எப்படியாவது ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் இனியா. தமிழ் சினிமாவில் பாடகசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இனியா வாகை சூடவா, மவுன குரு போன்ற படங்கள் மூலம் நல்ல நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

 ஆனால் திடீரென ராம்கிக்கு ஜோடியாக மாசாணி படத்தில் நடித்ததால் முன்னணி நடிகை வரிசையிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் தனியார் நகைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இனியா நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போது தமிழில் புலிவால், நினைத்தது யாரோ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறேன். நடிகை என்ற அந்தஸ்தை எனக்கு கொடுத்தது தமிழ் சினிமாதான், அதை என்றும் மறக்க மாட்டேன்.

 ஆக்ஷன் படங்களில் எனக்கு நடிப்பது மிகவும் பிடிக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு பிடித்த நாயகன் என்பதால் அவர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். கவர்ச்சியாக நடிக்கும் சூழ்நிலை வந்தால் நான் நடிப்பேன். 

 ஆனால் சில நடிகைகள் மாதிரி கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போகப்போக கவர்ச்சியான உடைகளில் நடிக்கிறார்கள், நான் அப்படியல்ல. கதைக்கேற்ற மாதிரி என்னை மாற்றிக்கொன்று நடிக்கத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment