மணிரத்னத்துக்கு நோ சொன்ன கமல் மகள் அக்ஷரா பாலிவுட்டில் நடிக்கிறார்
மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த அக்ஷரா, பாலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கிறார். கமலின் 2வது மகள் அக்ஷரா. முதல் மகள் ஸ்ருதி ஹாசன் நடிகையாகி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அக்ஷராவை பொறுத்தவரை டைரக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் உதவி இயக்குனராக பாலிவுட் படங்களில் பணியாற்றி வருகிறார்.
நடிப்பதற்காக பல அழைப்புகள் வந்தபோதும் ஏற்கவில்லை. கடல் படம் மூலம் அவரை அறிமுகப்படுத்த மணிரத்னம் விரும்பினார். இதுபற்றி அக்ஷராவிடம் அவர் கேட்டபோது, நடிக்கும் எண்ணமில்லை என்று மறுத்ததுடன், திரைக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அமிதாப் நடித்த பா படத்தை இயக்கிய பால்கி இந்தியில் புதிய படம் இயக்க உள்ளார்.
இதில் தனுஷ் ஹீரோ. அவருக்கு ஜோடியாக அக்ஷராவை நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இயக்குனர். இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் அக்ஷரா நடிப்பதற்கு சாதகமாக பதில் சொல்லி இருக்கிறாராம். நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த அக்ஷராவின் பிடிவாதம் ஓரளவுக்கு தளர்ந்திருக்கிறது.
இன்னும் சில வாரங்களில் அவர் நடிப்பது உறுதி செய்யப்படும் என்று இயக்குனர் தரப்பில் கூறப்படுகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment