என் இமேஜ் உங்க கையில், ப்ளீஸ் 'அந்த' சீனை கட் பண்ணுங்க: இயக்குனரிடம் கெஞ்சிய நயன்தாரா

No comments
ஆரம்பம் படத்தில் வந்த ஒரு காட்சியை நீக்கிவிடுமாறு நயன்தாரா விஷ்ணுவர்தனிடம் கேட்டுக் கொண்டாராம்.
இரண்டாம் சுற்றில் நயன்தாரா தனக்கென ஒரு இமேஜை பெற்றுள்ளார். அது டேமேஜாகிவிடாமல் இருக்க அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். இந்நிலையில் அந்த இமேஜுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் வந்துள்ளது.
அப்போது நயன்தாரா என்ன செய்தார் என்று பார்ப்போம்.
முன்னதாக அந்த ஹோட்டல் காட்சியை விட படுகவர்ச்சியான காட்சியில் நயன்தாரா நடித்திருந்தாராம். படத்தின் முதல் காப்பியை பார்த்தவர்களில் சிலர் என்ன நயன் இதுஇ இதை பார்த்தால் உங்களை செக்சி நடிகை என்று அல்லவா முத்திரை குத்துவார்கள் என்று கூறினார்களாம்.
எங்கே தன்னை கவர்ச்சி நடிகை பட்டியலில் சேர்த்துவிடுவார்களோ என்று நினைத்த நயன் இயக்குனர் விஷ்ணுவர்தனை அணுகி தயவு செய்து அந்த காட்சியை நீக்கிவிடுங்கள்இ இல்லை என்றால் என் இமேஜ் டேமேஜாகிவிடும் என்று கோரிக்கை விடுத்தாராம்.

நயன்தாரா கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த படுகவர்ச்சிகரமான காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாம். தன்னை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் ஆடை குறைப்பில்லாத கதையாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறாராம் நயன்.




No comments :

Post a Comment