சூப்பர் ஸ்டாரின் புகழ் பாடும் கன்னடப் பாடல்
கன்னட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஒரு பாடல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.
'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் அவர் காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன.
இயக்குனர் ருஷியால் எழுதப்பட்ட இப்பாடலுக்கு பிரதீப் ராஜா இசையமைத்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் கூறுகையில், இப்பாடலின் சிறப்பம்சமாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்றும் இந்தப்படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார் எனவும் கூறியுள்ளார்.
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment