சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா!

No comments
சுந்தர் சி இயக்கும் கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தில் அஞ்சலிக்கு பதில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் சிவாஇ அஞ்சலிஇ விமல் ஓவியா நடித்த படம் கலகலப்பு. கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வசூலைக் குவித்தது.
அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை படம் முடிந்ததும் இந்த கலகலப்பு 2-வை இயக்குகிறார்.
முதல் பாகத்தில் நடித்த அதே சிவா, விமல், ஓவியா உள்ளிட்டோர்தான் இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். ஏற்கெனவே சிவா, விமல், ஓவியா ஆகியோரின் கால்ஷிட்டை சுந்தர் சி பெற்றுவிட்டாராம்.
ஆனால் அஞ்சலி வருவதுதான் சந்தேகமாக உள்ளதாம். இத்தனைக்கும் தமிழகத்திலிருந்தபடி இப்போது அஞ்சலிக்காக சில பஞ்சாயத்துகளை முன்னின்று பேசுபவர் சுந்தர் சிதானாம். இருந்தும் அஞ்சலியின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்பதால், வேறு ஹீரோயினைப் பார்க்கத் தொடங்கியுள்ளார்.
அப்போதுதான் ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது. அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யாவையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம் சுந்தர் சி.






No comments :

Post a Comment