சிம்பு, நயன் ஜோடி சேர்வதால் பாண்டிராஜ் படத்திற்கு கூடிய மவுசு
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளது அந்த படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.
சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து வல்லவன் படத்தில் நடித்தார்கள். அந்த படத்தை பற்றிய பேச்சு வந்ததை விட நயன், சிம்பு காதல் விவகாரம் பற்றி அதிகம் பேசப்பட்டது.
காதல் ஜோடியாக அவர்கள் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிம்புவும், நயனும் பிரிந்துவிட்டனர்.
காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்நிலையில் தான் பாண்டிராஜ் தான் சிம்புவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு நயன்தாரா தான் சரியான ஹீரோயின் என்று முடிவு செய்தார். அவரை அணுகி படத்தில் நடிக்கவும் சம்மதிக்க வைத்தார். ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக இருந்த நயனும், சிம்புவும் மீண்டும் ஜோடி சேர்வது படத்தின் மவுசை தற்போதே கூட்டியுள்ளது.
படத்தின் சேட்டிலைட் உரிமம் மற்றும் வினியோக உரிமை குறித்து இப்போதே பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment