அஜீத்தின் வீரம் பொங்கலுக்கு நிச்சயம்!- தயாரிப்பாளர் அறிவிப்பு

No comments
அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் முதல் விளம்பரம் இன்று வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் - தமன்னாஇ விதார்த் நடித்துள்ள படம் வீரம். பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பொங்கலுக்கு வெளி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள ' வீரம் ' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு.

மங்காத்தாவிலிருந்து அவர் கடைப்பிடிக்கும் நரைத்த தலைஇ தாடி தோற்றம்தான் இதிலும். ஒரே ஒரு மாறுதல் வேட்டி - சட்டை. 'வீரம் ' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முற்றுப் பெற உள்ளன. வீரம் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்று பட தயாரிப்பாளர்கள் வெங்கட்ராம ரெட்டி மற்றும் பாரதி ரெட்டி உறுதியாக கூறினார். பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது. இந்தப் படத்துக்கே பெரும்பாலான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வீரம் படத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





No comments :

Post a Comment