லட்சுமி மேனன் சம்பளம் இப்போ ரூ 40 லட்சம்

No comments
தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன்தான் இப்போது கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட நாயகி. சுந்தரபாண்டியனில் அறிமுகமான லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து அமைந்த அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன

தொடர்ந்து அவர் நடித்த கும்கி, குட்டிப்புலி படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றன.
 விமர்சகர்களால் தோல்விப் படம் என்று கூறப்பட்ட குட்டிப் புலிதான் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்கிறது பாக்ஸ் ஆபீஸ். இடையில் நஸ்ரியா வரவால் கொஞ்சம் ஆட்டம் கண்டது லட்சுமி மேனன் மார்க்கெட். 

ஆனால் பாண்டிய நாடு வெளியான பிறகு, கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட நாயகியாக பார்க்கப்படுகிறார் லட்சுமி. இந்தப் படத்தின் வெற்றி அவரது கால்ஷீட் விலையை ரூ 40 லட்சத்துக்கு உயர்த்தியுள்ளது. 
இப்போது அவர் நடித்து வரும் சிப்பாய், மஞ்சப்பை போன்ற படங்களுக்குப் பிறகு, புதிதாக ஒப்பந்தமாகியுள்ள படங்களுக்கு இதுதான் சம்பளமாம். விஷால் தனது அடுத்த படமான நான் சிகப்பு மனிதனில் லட்சுமியையே ஹீரோயினாக்கியயதோடு,இந்த புதிய சம்பளத்தையும் தாமாகவே முன்வந்து கொடுத்தாராம்.


No comments :

Post a Comment