ரஜினி படம் வெளியாகி இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை ரிலீஸ் பண்ணுங்க!'

No comments
பொங்கலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்ட கமலின் விஸ்வரூபம் 2இ இரு வாரங்கள் தள்ளி ஜனவரி 26-ம் தேதி வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்இ திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். வரும் பொங்கல் அன்று பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகின்றன.

குறிப்பாக மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் வெளியாகிறது. அதே தினத்தில் அஜீத் நடித்த வீரம் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். விஜய் நடித்த ஜில்லாவும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் அரங்குகளை கோச்சடையானுக்கே தர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கிடைக்கும் அரங்குகளில் ஜில்லாவையும் வீரம் படத்தையும் வெளியிடப் போவதாக பிடிவாதம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கமல் நடித்த விஸ்வரூபம் படத்தை பொங்கலன்று வெளியிடாமல்இ ஜனவரி 26-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் படங்கள் குறைந்தது 4 வாரங்கள் வரையிலாவது ஓடும் என்பதால் உடனடியாக கமலுக்கு அரங்குகள் தர முடியாத நிலை உள்ளது. எனவே ரஜினி படம் வெளியான இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை வெளியிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களிடமும் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment