சமீரா ரெட்டிக்கு திருமணம் : காதலரை மணக்கிறார்

No comments
நடிகை சமீரா ரெட்டி தனது 2 வருட காதலரை மணக்க உள்ளார். அஜீத்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமீராவுக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றித்திரிந்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


 இருவரும் மோட்டார் சைக்களில் பல சமயங்களில் ஜோடிபோட்டு சுற்றி னர். அப்போது தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி சமீரா ஹெல்மெட் அணிந்து காதலனுடன் சவாரி செய்தார். கடந்த 2 வருடமாக இவர்களது காதல் வளர்ந்தது. 

படங்களில் பிஸியாக நடித்து வந்த சமீரா ரெட்டி தனது காதலை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்து வந்தார். தற்போது அவரது காதல் அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த வாரம் சமீரா அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் பாந்தராவில் உள்ள சமீராவின் வீட்டில் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

 நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட ஒருவர் கூறும்போது, சமீராவும், அக்ஷயும் ஒரே தெருவில் வசித்து வந்தனர். இது சமீராவுக்கு நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்தது. இருவரும் காதலர்களான பிறகே இந்த விவரம் தெரியவந்தது என்றார். அக்ஷயுடன் நிச்சயதார்த்தம் நடந்ததா? என்று சமீராவிடம் கேட்டபோது, ஆமாம் எங்களது நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க உள்ளது என்றார்.

No comments :

Post a Comment