ஸ்ருதி ஹாசனுக்கு மர்ம காய்ச்சல்

No comments
காய்ச்சலால் கடும் அவதிப்படுகிறார் ஸ்ருதி ஹாசன். பனிக்காலம் தொடங்கியநிலையில் ஊரெல்லாம் மர்ம காய்ச்சல் பலரை வாட்டி எடுக்கிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் காய்ச¢சல் ஏற்பட்டிருப்பதையடுத்து அவர் ஷூட்டிங் போக முடியாமல் அவதிப்படுகிறார்.

 இதுபற்றி ஸ்ருதி டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது,‘சரியான தொல்லை. குளிர் ஜுரம் என்னை வாட்டி எடுக்கிறது. போர்வையை இழுத்துபோர்த்திக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கிறேன். மாத்திரை சாப்பிட்டும் ஜுரம் விட்டபாடில்லை. 

மர்ம காய்ச்சலாக இருக்குமோ என்ற பயம் உள்ளது. என்னதான் மாத்திரை சாப்பிட்டாலும் இயற்கை வைத்தியம்தான் தீர்வை தரும் என்று எண்ணுகிறேன். அதையும் முயற்சித்து வருகிறேன்Õ என்றார். ஸ்ருதி தற்போது எவடு என்ற தெலுங்கு படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாகவும், ரேஸ் குர்ரம் என்ற படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். தமிழில் அவர் புதிய படம் எதையும் தற்போது ஒப்புக்கொள்ளவில்லை.

No comments :

Post a Comment