ஐதராபாத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த வித்யா பாலன்

No comments
ஐதராபாத் ரயில் நிலையத்தில் வித்யாபாலன் பிச்சை எடுத்து திட்டு வாங்கினார். தி டர்ட்டி பிக்சர் இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யாபாலன். இதையடுத்து கஹானி படத்தில் கர்ப்பிணி வேடம் ஏற்று கொல்கத்தா சாலைகளில் தெரு தெருவாக அலைந்து நடித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

 தற்போது மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தி மற்ற ஹீரோயின்களை திணறடித்திருக்கிறார். தியா மிர்ஸா தயாரிப்பில் பாபி ஜாசூஸ் என்ற படத்தில் பெண் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இந்த வேடத்துக்காக வீட்டில் நிறைய ஹோம் ஒர்க் செய்து பயிற்சி பெற்றார். சமீபத்தில் துப்பறியும் காட்சி ஒன்றுக்காக பிச்சைக்காரன் வேடம் போட வேண்டி இருந்தது. இதற்காக அவருக்கு தாடி மீசை ஒட்டி, அழுக்குபடிந்த விக் வைக்கப்பட்டது. 

 லுங்கியும், சட்டையும் அணிந்து கழுத்தில் பாசி மணிகள் போட்டு அசல் பிச்சைக்காரன் தோற்றத்துக்கு மாறியதும் ஐதராபாத் ரயில் நிலையம் முன்பு அவரை அமர வைத்தனர். கேமராவை மறைத்து இந்த காட்சியை படமாக்கியபோது, பிச்சைபோட அருகில் வந்த ஒருவர், கை கால் எல்லாம் நல்லத்தானே இருக்கு. உழைச்சி பிழைக்க வேண்டியதுதானே என்று முணுமுணுத்தபடி பாக்கெட்டிலிருந்து எடுத்த காசை மீண்டும் பாக்கெட்டிலேயே போட்டுக்கொண்டு நடையை கட்டினார்.

No comments :

Post a Comment