புதியவர்களுடன் பணியாற்ற இளையராஜா ஆர்வம்

No comments
விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.வேலுசாமி தயாரிக்கும் படம், ஒரு ஊர்ல. வெங்கடேஷ், மேகா பட்டேல் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு. இளையராஜா இசை அமைத்துள்ளார். 

கா.ச.வசந்தகுமார் இயக்கி உள்ளார். இதன் பாடல்களை வெளியிட்டு இளையராஜா பேசியதாவது:நான் எப்போதுமே புதியவர்களுக்கு ஆதரவு அளிப்பவன். இந்தப் படத்தினரும் என்னிடம் வந்தார்கள். படத்தை பார்த்துவிட்டு பிடித்திருந்ததால், 2 நாளில் இசை அமைத்துக் கொடுத்தேன். 

நான் எந்தப் படத்துக்குமே இரண்டு அல்லது மூன்று நாளுக்கு மேல் பின்னணி இசை அமைத்ததில்லை. அது வெள்ளி விழா படமாக இருந்தாலும் சரி, 100 நாள் படமாக இருந்தாலும் சரி. இனிமேல் பணம் சம்பாதிக்கும் ஆசையில்லை. புகழ் சம்பாதிக்க தேவையும் இல்லை.

 புதியவர்கள் என் இசையையும் என் பெயரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களோடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு இளையராஜா பேசினார்.பாலுமகேந்திரா, கேயார், ராதாகிருஷ்ணன், ரத்னகுமார், பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன், கவிஞர் மு.மேத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment