லாவண்யா திரிபாதி மேல் விழுந்த பார்வை

No comments
கோடம்பாக்கத்தில் தற்போது அதிகம் கவனிக்கப்பட்டு வருபவர் லாவண்யா திரிபாதி.
உத்ராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லாவண்யா 2011ம் ஆண்டில் மிஸ்.உத்ரகாண்டாக தெரிவானவுடன் சினிமா கண்களுக்கு தெரிய ஆரம்பித்தார்.

இந்தி படத்தில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோதே தெலுங்கிற்கு அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள்.

இவர் நடித்த அந்தால ராட்சஸி சூப்பர் ஹிட்டாக. லாவண்யா பிசியாகிவிட்டார்.

தமன்னா மாதிரி வடக்கும், தெற்கும் கலந்த முக அமைப்பு அனைவருக்கும் பிடித்துப்போக தமன்னா கால்ஷீட் கிடைக்காதவர்கள் லாவண்யா பக்கம் ஒதுங்க ஆரம்பித்துள்ளார்களாம்.

தற்போது பிரமன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.சசிகுமாருடன் சுவிஸ் குளிரில் ஆட்டம்போட்டு திரும்பியிருக்கும் லாவண்யா அடுத்து விஷ்ணு சிவன் இயக்கும் நானும் ரவுடிதான் படத்தில் கவுதம் கார்த்திக்குக்கு ஜோடி போடுகிறார்.

No comments :

Post a Comment