தமிழ் படம் இயக்கும் ஆஸ்திரேலிய இயக்குனர்

No comments


ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் தமிழ் படம் இயக்குகிறார். பழமையான இசை கருவி யாழ். இந்த பெயரில் தமிழ் படம் இயக்குகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எம்.எஸ்.ஆனந்த். 

அவர் கூறியதாவது: யாழ் என்பது இலங்கையின் பழமையான இசை கருவி. இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்களின் கலாசாரத் துக்கும் யாழ் என்றுதான் பெயர். இந்த கலாசாரத்தை பற்றி இலங்கை இறுதி போரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

 மறக்கப்பட்ட இக்கலாசாரத்தின் சமகாலத்து நிலைமையை படம் விளக்குகிறது. இதில் வினோத், சசி, மிஷா, ரக்ஷனா, லீமா பாபு ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். கருப்பையா, நசீர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். பாரதி, அருணகிரி இசை அமைத்திருக்கின்றனர்.


No comments :

Post a Comment