‘அனேகன் படம்’: கப் சிப் தனுஷ்

No comments
அனேகன் பட கெட்டப் குறித்து எந்த தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளாராம் தனுஷ்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் அனேகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.

ஆனால் அவர் எந்த மாதிரியான கெட்டப்புகளில் வருகிறார் என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை.

மேலும் தனுஷ் தான் இதுவரை வந்திராத கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம். அதனால் தனது கெட்டப் குறித்த விவரங்கள் சிறிதளவும் கசிந்துவிடாமல் இருக்க பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

இருப்பினும் ஒரு கெட்டப் பற்றிய புகைப்படம் லீக்காகிவிட்டது. வழக்கமாக அவர் தான் நடிக்கும் படங்களின் கெட்டப்பை அவ்வப்போது போட்டோ எடுப்பார். ஆனால் இந்த படத்தில் மட்டும் புகைப்படமே எடுக்கவில்லையாம்.

No comments :

Post a Comment