மீண்டும் சமந்தாவுக்கு தலைவலி

No comments

தெலுங்கு உலகில் மீண்டும் மகேஷ் பாபு பட போஸ்டர் புகைய ஆரம்பித்துள்ளது.
டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு நடித்திருக்கும் படம் நேனொக்கடய்னே. இப்படத்தின் போஸ்டரில், கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்ல அவர் பின்னால் நாய் மண்டியிட்டு நடப்பதுபோல் ஹீரோயின் கை, கால்களை மணலில் ஊன்றி அவர் பின்னால் செல்வதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.


இதைக்கண்ட நடிகை சமந்தா, பெண்களை இழிவுபடுத்துவதுபோல் மகேஷ்பாபு பட போஸ்டர் இருக்கிறது என தனது இணைய தள பக்கத்தில் கருத்து வெளியிட்டார்.

இதனால் கோபம் அடைந்த மகேஷ் பாபு ரசிகர்கள் சமந்தாவை திட்டி இணைய தளங்களில் மெசேஜ் போட்டனர். அதைக்கண்ட சமந்தாவின் காதலன் சித்தார்த் கோபம் அடைந்து ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மோதல் வலுப்பதையறிந்த மகேஷ்பாபு, இப்பிரச்னையில் தலையிட்டு அதனைத் தீர்த்து வைத்தார்.

இத்துடன் போஸ்டர் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று திரையுலகினர் நம்பினர். தற்போது மகேஷ்பாபு திடீரென்று சமந்தாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

அதில், சமந்தாவுக்கு என்னையும், எனது மனைவி நம்ரதாவையும் நன்றாக தெரியும்.

பட போஸ்டரில் ஏதாவது மனஉறுத்தல் இருந்திருந்தால் முதலில் அதுபற்றி என்னிடம் தொடர்புகொண்டு சமந்தா கேட்டிருக்கலாம். அதற்கு பதிலாக தனது கருத்தை அவர் இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அவர் அப்படி செய்திருக்கக்கூடாது. எங்களிடம் இதுபற்றி பேச முயற்சியாவது செய்திருக்கலாம் என குறிப்பிட்டிக்கிறார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

No comments :

Post a Comment