வசூல் வேட்டையில் வீரம் - ஜில்லா
பொங்கலுக்கு வெளியான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தங்க வேட்டை நடத்தி வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி கொலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் திகதி வெளியாகின.
இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் வசூல் செய்து வருகின்றன.
வீரமும் , ஜில்லாவும் வெளியான முதல் வார இறுதி நாட்களில் மொத்தமாக ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் திரிநாத் தெரிவித்துள்ளார்.
வீரம் மற்றும் ஜில்லா படங்களின் தயாரிப்பாளர்கள் வசூல் விவரங்களை துள்ளியமாக தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். பொங்கல் விடுமுறை இரண்டு படங்களுக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் வெளியானது.
மேலும் வீரம் படத்தில் அஜித்தின் கிராமத்து கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment