மீண்டும் வீரம் பார்ப்பேன்: சிம்பு

No comments
அஜித்தின் வீரம் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார் சிம்பு.
நடிகர் சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகராவார், அஜித் படங்களை முதல்நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவார்.

ஆரம்பம் வெளியான அன்று காலை காட்சியை சென்னையில் உள்ள காசி திரையரங்கில் பார்த்தார். ஆனால் வீரம் வெளியான அன்று சிம்பு வெளிநாட்டில் இருந்ததால் படத்தை உடனே பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, மன்னிக்கவும், ஊரில் இல்லை. மேலும் பிசியாக வேறு இருந்தேன். தற்போது வீரம் படம் பார்த்தேன்.

பண்டிகை காலத்திற்கு ஏற்ற படம். மீண்டும் இந்த படத்தை பார்க்கப் போகிறேன். இயக்குனர் சிவா , அஜித்தின் மாஸை புரிந்து கொண்டு படத்தில் சரியான அளவு சென்டிமென்ட், ஆக்ஷன் வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment