நடிகைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மர வியாபாரி

No comments

மர வியாபாரியிடம் ரூ.13 லட்சம் கடன் கொடுத்து விட்டு திருப்பி வாங்க முடியாமல் தவிக்கிறார் நடிகை சஞ்சனா. தனக்கு அந்த வியாபாரி கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகாரும் கொடுத்துள்ளார். தமிழில் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் இணைந்து நடித்த குற்றப்பிரிவு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சஞ்சனா. இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 


சமீபத்தில் இவர் பெங்களூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

எங்கள் குடும்ப நண்பர் ராஜீவ் மல்ஹோத்ரா, அவரது மகன் பிரசாந்த் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு என்னிடமிருந்து ரூ.13.5 லட்சம் கடன் வாங்கினார்கள். அவர்களிடம் அதை திருப்பி கேட்டபோது கால அவகாசம் கேட்டனர். அதன்பின்னர், குறிப்பிட்ட தொகைக்கு காசோலை கொடுத்தனர். அதை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. 

இதுபற்றி ராஜீவிடம் கேட்டதற்கு, பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். ராஜீவ் மர வியாபாரம் செய்து வருகிறார். கடனை திருப்பி வாங்குவதில், பிரச்னையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால், அவர் திருப்பி தருவதாக இல்லை. அத்துடன் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சஞ்சனா கூறியுள்ளார்.

No comments :

Post a Comment