நாய் கண்காட்சியில் நமீதா!

No comments
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் நாய் பிரியை த்ரிஷா. நாய்களுக்கு எதிராக எங்காவது ஒரு அசம்பாவிதம் நடக்கிறது என்றால் முதல் ஆளாக முன்வந்து குரல் கொடுத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு நடிகையான நமீதாவுக்கும் நாய்கள் மீதான பாசம் அதிகரித்துள்ளதாம். தான் எந்த நாடுகளுக்கு சென்றாலும் அங்கிருந்து வரும்போது அங்குள்ள ஒரு கொளுகொளு நாய்குட்டியுடன்தான் இந்தியாவுக்குள் என்ட்ரி ஆவார் நமீதா. அந்த அளவுக்கு விதவிதமான நாய்கள் வளர்ப்பதில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து வந்தது.

அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கிய நாய்கள் கண்காட்சியில் நமீதாவும் தனது நாயுடன் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்திழுத்தார். இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 365 நாய்கள் கலந்து கொண்ட இந்த கண்காட்சியில் நியூசிலாந்திலிருந்து கடந்த ஆண்டு தான் வாங்கி வந்த புதுவகையான நாயுடன் கண்காட்சியில் பங்கேற்றார். அதற்கு சாக்லெட் என்று பெயர் வைத்துள்ளாராம் நமீதா.

அந்த நாயுடன் அவர் மைதானத்திற்குள் வந்ததும் ஒட்டுமொத்த ரசிகர்கள் அனைவரின் கவனமும் நமீதா மீதும், அவரது நாய் மீதுமே இருந்தது. மொத்த 7 சுற்றுகள் நடத்தப்பட்ட இந்த நாய் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் நமீதாவின் நாய்க்கு எந்த பரிசும் கிடைக்காதபோதும், நமீதாவோடு வந்திருந்ததால் விஐபி நாய் என்ற அங்கீகாரத்தை பெற்றது.

No comments :

Post a Comment