நம்மகூட ஜோடி போட ஹன்சிகாவுக்கு மன தைரியம் வேணும்ல - தம்பி ராமையாவின் பேட்டி!
மூச்சுக்கு 300 தடவை, 'நல்லது தம்பி’ என்று சொல்வது தம்பி ராமையா ஸ்டைல். 'டைம்பாஸ்னாலே செம மாஸ் தம்பி’ என பன்ச்சோடு ஓப்பனிங் கொடுக்கிறார் அண்ணன், தம்பி ராமையா.
''உங்க பேரை வெச்சே நிறைய காமெடி நடந்திருக்குமே?''
''ஆமா தம்பி. என்னைவிட வயசுக் குறைச்சலான ஆளுங்க 'அண்ணே தம்பின்னும், தம்பி அண்ணே’னும் குழப்பமாக் கூப்பிடுவானுங்க. பெரிய ஆளுங்க, 'தம்பி தம்பி’னும் கூப்பிடுவாங்க. ஆனா இப்போ புதுசா ஒண்ணு சேர்ந்திருக்கு. 'தம்பி சார்’னு. அட இதுகூட நல்லாத்தான்யா இருக்குனு நெனைச்சுக்குவேன் ராஜா.''
''உண்மையைச் சொல்லுங்க. வடிவேலுகூட இப்போ பேச்சு வார்த்தையே இல்லைதானே?''
''அட... எல்லோரும் இப்படியே கேட்டா எப்பிடி தம்பி? இப்பவும் எப்பவும் அவர் மனசுல நானும் என் மனசுல அவரும் இருக்கோம். சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் இருந்தது நிஜம்தான். இப்போ அவருக்கு விழுந்த இடைவெளி, தமிழ் சினிமாவுக்கே பெரிய இழப்புனுதான் சொல்லணும். ஆனாலும் கம்பீரமா வந்து கலக்குவார் பாருங்க. நான் மதிக்கக்கூடிய உன்னதமான கலைஞன் வடிவேலு. எங்களுக்குள்ளே கொடுக்கல் வாங்கல் பிரச்னையா என்ன? அதனால சண்டை போட்டுக்கிட்டு முறைச்சுக்கணும்னு அவசியம் இல்லை. காலம் கூடிவந்தா, ஒண்ணா நடிப்போம்.''
''ஓ.கே சார். 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’னு சொன்னதும் உங்க மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்?''
''அது நான் நினைச்ச மாதிரி எடுக்க முடியாத படமாப் போச்சு. மூணு கேரக்டருக்கும் மூணு ஆர்ட்டிஸ்ட்டை வெச்சுப் பண்ணி இருந்திருக்கணும். காலம் கடந்துபோச்சு. இப்போ காலம் என்னைப் பக்குவமாக்கி இருக்கு. பொறுமையா அடி எடுத்து வைக்கிறேன். என் மகன் உமாபதியை ஹீரோவாக்கிப் பெரிய கம்பெனிக்கு டைரக்ஷன் பண்ணப்போறேன். மார்ச் மாசம் அறிவிப்பு வரும். படத்தோட பேரே டரியலா வச்சிருக்கேன். . 'வரலாறு முக்கியம் மாப்ளே’ டைட்டில் எப்பூடி?''
''சூப்பர் சார்...'தேசிய விருது’ புகழ் தம்பி ராமையானு உங்களைக் கூப்பிடுறப்போ எப்பிடி இருக்கு?''
''சிலிர்ப்பெல்லாம் இல்லை தம்பி. விருதெல்லாம் வீட்டு அலமாரியில வைக்கிறதுக்குத்தானே. 45 வயசுல ஒரு மனுஷனுக்கு பிரச்னைகளை எதிர்கொள்கிற உடலும் மனசும் இருந்தா, அதுதான் சாதனை. இப்போ என்னோட கேரியர் ஜிவ்வுனு டேக்-ஆஃப் ஆகி இருக்கு. பொங்கலுக்கு 'ஜில்லா’, 'வீரம்’ ரெண்டுலயும் நடிச்சிருக்கேன். பார்த்திபன், பிரகாஷ்ராஜோட படங்கள்லேயும் நடிச்சிட்டிருக்கேன். இதோ மகனை அறிமுகப்படுத்தப் போறேன். அவன் உலக சினிமா பார்த்து வளர்ந்த பய... உள்ளூர் சினிமாவே முழுசாத் தெரியாத நாம கலக்கலையா? அவன் நல்லா வருவான் பாருங்க.''
''நீங்க ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறீங்களாமே? ஹீரோயின் யார் சார்?''
''ஆத்தீ... வதந்....தீ தம்பி அது. முக்கிய ரோல்னு சொல்லுங்க. பையன் ஹீரோவா நடிச்சுட்டு இருக்கிறப்போ, நமக்கு ஏன் இந்த விபரீத ஆசை? அதுக்கெல்லாம் டெய்லி ஒரு மணி நேரம் ஒர்க்அவுட் பண்ணனும், காலையில பச்சைத் தண்ணியில குளிச்சிட்டு ஒன்றரை கிலோ மீட்டர் ஓடணும், டெய்லி ஒரு மணி நேரம் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணனும். அசின், நயன்தாரா கால்ஷீட்டுக்காக தேவுடு காக்கணும். நம்மகூட ஜோடி போட ஹன்சிகா மோத்வானிக்கு மன தைரியம் வேணும்ல!''
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment