வாய்ப்பேச்சை வச்சுதான் நம்ம வண்டி ஓடுது - சந்தானம்!

No comments
காமெடியன்களும் ஹீரோவாகும் காலம் இது. காரணம், இன்றைக்கு பல படங்களின் வியாபாரத்தையே காமெடியன்கள்தான் தீர்மானித்து வருகிறார்கள். 


அதனால்தான் படங்களின் வியாபாரத்தை தீர்மானிக்கிற நாமே கதாநாயகனாக நடித்தால் என்ன? என்கிற ஆசை பல காமெடியன்களுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில், கவுண்டமணி, வடிவேலுவைத் தொடர்ந்து சந்தானமும், கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் ரசிகர்களை பல்ஸ் பார்த்தார்.

மூன்று ஹீரோக்களில் ஒருவர் போன்று தனது கதாபாத்திரத்தை உருவாக்கி பாடல் காட்சிகளில் எல்லாம் நடித்தார்.

அது பெரிய அளவில் ஒர்க்அவுட்டானது. அதனால், அடுத்து தன்னை முதன்மைப்படுத்தும் கதைகளாக கேட்டு வந்தவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் சந்தானம் ஆக்சன் காட்சிகளில்கூட நடிப்பதாக செய்திகள் பரவி கிடக்கிறது. அதனால் இதுபற்றி அவரை விசாரித்தபோது, கை சண்டை, கால் சண்டை போடுற அளவுக்கு நான் ஆக்சன் ஹீரோ இல்லீங்க.

நம்மகிட்ட இருக்கிறது வெறும் வாய் சண்டை மட்டும்தான். இந்த வாய்ப்பேச்சை வச்சுதான் நம்ம வண்டியே ஓடுது என்கிறார்.

மேலும், ஹீரோவாக நடிக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டபோது, நடனம் மட்டுமே பயிற்சி எடுத்தேன்.

மற்ற ஹீரோக்களை மாதிரி வில்லனை புரட்டி எடுக்கிற கதையோ, காட்சியோ என் படத்தில் இல்லை. அதனால் சண்டை பயிற்சி எதுவும் எடுக்கவில்லை.

அப்படி நான் சண்டை போட்டாலும் அதுவும் காமெடியாகத்தான் இருக்கும் என்பதால் அதற்கெல்லாம் நான் ரிஸ்க் எடுக்கவில்லை என்கிறார் சந்தானம்.

No comments :

Post a Comment