அகடம் -திரைவிமர்சனம்

No comments
காலாவதியான மருந்துகளை வாங்கி புது லேபிள் ஒட்டி விற்கும் கும்பல், ஒரு பெண்ணை கொன்று புதைக்கிறது. அதற்கு உதவியாக ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவரை அழைத்து வருகிறார்கள். இந்த ரகசியங்களை அறிந்து கொள்ளும் இன்னொரு மருந்து ஏஜெண்ட், அந்த கும்பலை மிரட்டுகிறார். 

அந்தக் கும்பல் ஆஸ்பத்திரி ஊழியரை மிரட்ட, கொல்லப்பட்ட பெண், ஆவியாக அனைவரையும் மிரட்ட, திக் திக் திருப்பங்கள். கடைசியில் யாரும் எதிர்பாராத ஒரு கிளைமாக்சை வைத்து திகைப்பூட்டுகிறார்கள். ஒரு வீடு, ஒரு தோட்டம், நான்கைந்து கேரக்டர்கள் இவற்றைக்கொண்டு போரடிக்காமல் திகில் படத்தை கொடுத்ததோடு ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்கள் இயக்குனர் முகமது இஷாக்கும், ஒளிப்பதிவாளர் நவுசத் கானும்.ஹீரோ தமிழ், பயந்து, மிரண்டு, மிரட்டி யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

 ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா வசனமே இல்லாமல் பார்வையிலேயே பயமுறுத்துகிறார். படத்தில் நடித்துள்ள அனைவரும் யதார்த்தம் மீறாமல் ஒரே ஷாட் படம் என்பதால் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஜான் கேரக்டரில் வரும் ஸ்ரீனி அய்யர்தான் ஓவர் நடிப்பால் வெறுப்பேற்றுகிறார். இரண்டே காட்சியில் வந்தாலும் பாலியல் தொழிலாளியாக வரும் அனிஷா கேரக்டர் மனதில் பதிகிறது.

 பிளாஷ்பேக், சேசிங், ஆக்ஷன், சென்டிமென்ட், என அனைத்துக்கும் வாய்ப்பிருக்கும் கதை என்றாலும் அவற்றை வசனங்களின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது திரைக்கதை வடிவம். பாஸ்கரின் பின்னணி இசை திகிலூட்டுகிறது.ஒரே இடத்தில் காட்சிகள் நகர்வதாலும் நான்கு பேரை மட்டும் திரும்ப திரும்ப பார்க்க வேண்டியிருப்பதும், அவர்கள் எப்போதும் தண்ணி அடித்துக் கொண்டே இருப்பதும் நெளிய வைக்கிறது.

No comments :

Post a Comment