‘மகாபலி’யை எதிர்நோக்கும் தமன்னா

No comments
‘வீரம்’ வெற்றியைத் தொடர்ந்து ‘மகாபலி’ படத்தினை எதிர்நோக்கியுள்ளார் தமன்னா. பொங்கல் ஜல்லிக்கட்டாக தன்னாவின் நடிப்பில் வெளியான வீரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியுடன் தனது அடுத்த இருமொழித் திரைப்படமான 'மகாபலி'யின் தயாரிப்பை தமன்னா ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார். 'நான் ஈ' படப்புகழ் இயக்குனரான ராஜமௌலி இயக்கவுள்ள 'மகாபலி' தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராக உள்ளது.

 இதில் தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். வரலாற்றுப் படமான இதில் தன்னுடைய கதாபாத்திரம் தனக்குப் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்ட தமன்னா படப்பிடிப்பு தொடங்கும் காலத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment