‘அஞ்சான்’ சூர்யா

No comments
சூர்யாவின் படத்திற்கு ‘அஞ்சான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் 35 நாட்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

 லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் இந்தப்படத்தில் இப்போது யுடிவி நிறுவனமும் இணைத்தயாரிப்பாளராக இணைந்திருக்கிறது. படத்திற்கு ‘அஞ்சான்’ என அதிரடியான பெயரையும் சூட்டியுள்ளார்கள்.

 படத்தின் பெயரே இது ஒரு பக்கா ஆக்ஷன் படம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. படத்திற்கு லிங்குசாமியின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 'அஞ்சான்' இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஜனவரி இறுதியில் கோவா அதன் பின் மகாராஷ்ட்ராவின் பல பகுதிகளிலும் நடத்த இருக்கிறார்கள்.

No comments :

Post a Comment