உலகநாயகனுடன் இணையும் இயக்குனர் சிகரம்
உத்தம வில்லன் படத்தில் உலகநாயகனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் இயக்குனர் கே.பாலசந்தர்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் உலகநாயகன்.
கமல் நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் முடிவடைந்துள்ளது. இப்படம் வெளியானதும் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு தொடங்குகிறது.
இதுகுறித்து கமலஹாசன் கூறுகையில், நான் நடிக்கவிருக்கும் அடுத்த படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார்.
இதில் கே.பாலசந்தரும் என்னுடன் இணைந்து நடிக்கிறார்.
இதற்காக அவர் தாடி வளர்த்து வருகிறார். விஸ்வரூபம் 2 வெளியானதும், உத்தம வில்லன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment