புதுவிதமான கேரக்டரில் விஷால்
‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலின் கதாபாத்திரத்திற்கு முன்னுதாரணம் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குனர் திரு.
பாண்டிய நாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்துவருகிறார் விஷால்.
இப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இயக்குகிறார். விஷாலுடன் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது.
படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ஒரு மனிதனின் ஆசைகள் பற்றிய கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’. நாயகன் என்ன ஆசைப்படுகிறான். அதைநோக்கிச் செல்லும்போது என்னென்ன தடைகள் வருகின்றன? எல்லாவற்றையும் மீறி எப்படி தடைகளை எதிர்கொண்டு தனது ஆசையை அடைகிறான் என்பதே படத்தின் கதை.
“இந்தப்படத்தில் விஷாலின் கதாபாத்திரம் புதிது. சினிமாவில் பொலிஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன், துரோகி, விரோதி எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு.
ஆனால் இந்தப்படத்தில் விஷால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு எந்த முன் மாதிரியும் இல்லை. காரணம் கதை புதிது.. கதாபாத்திரம் புதிது என்று கூறியுள்ளார்.
மேலும்‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலுக்கு ராசியான ஜோடியாக மாறியுள்ள லட்சுமி மேனனுக்கு இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட வேடம் கொடுக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment