அஜித்திற்கு, சிம்புவின் பர்த்டே கிப்ட்!
அஜித்திற்கு பிறந்த நாள் பரிசளிக்கும் விதமாக ‘வாலு’ படத்தை ரீலிஸ் செய்யவிருக்கிறாராம் சிம்பு.
நடிகர் சிம்பு, ‘தல’ அஜித்தின் பரம ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.
தற்போது சிம்பு நடித்து வரும் படங்களில் ’வாலு’படமும் ஒன்று.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இந்தப் படத்தின் ஓடியோவை காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி முடிவு செய்துள்ளனர்.
மேலும் படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, தற்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறாராம் சிம்பு.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment