பாங்காக் ராணுவ தளவாடத்தில் ஜெய்ஹிந்த் 2

No comments
அர்ஜுன் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், ஜெய்ஹிந்த் 2. சுர்வீன் சாவ்லா, சிம்ரன் கபூர் ஹீரோயின்கள். படம் பற்றி அர்ஜுன் கூறும்போது, ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, கல்வியைப் பொறுத்தே அமைகிறது என்ற கருத்தை சொல்லும் படம். 

ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. சமீபத்தில் பாங்காக் ராணுவ தளவாடத்தில் ஷூட்டிங் நடந்தது. 

10 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில், உபயோகம் இல்லாத விமானங்கள், படகுகள், கார்கள் குவிந்து கிடந்தது. அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டண்ட் வீரர்களுடன் நான் மோதிய சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது என்றார்.

No comments :

Post a Comment